பலாங்கொடையில் சிறுமி துஷ்பிரயோகம் : பாடசாலை அதிபர் கைது!

பலாங்கொடை, பின்னவல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர் வீட்டுக்கு அருகில் வசிக்கும் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுமி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்  கூறினர்.

சந்தேக நபரான 50 வயதுடைய அதிபர் பலாங்கொடை அல்லராவ பிரதேசத்தில் வசிப்பவர் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.