கிழக்கு மாகாண பேரவைச் செயலாளருக்கு பாராட்டு விழா

பாறுக் ஷிஹான்
சம்மாந்துறை லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண பேரவைச் சபை செயலாளராக புதியாக பதவியேற்ற இலங்கை நிர்வாக சேவை சிரேஸ்ட உத்தியோகத்தர் எம்.எம் நஸீர் அவர்களுக்கான பாராட்டு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(05) மாலை சம்மாந்துறை லயன்ஸ் கழகத் தலைவர் கலாநிதி இஸட்.ஏ பஸீர் தலைமையில் சம்மாந்துறை அல் மர்ஜான் மகளிர் தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம் மாஹிர், இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் ஐ.எம் ஹனீபா, கிழக்கு மாகாண நிர்வாகத்திற்கான பிரதிப் பிரதம செயலாளர் எம்.மன்சூர்,முன்னாள் சிறு விவசாய ஏற்றுமதி அமைச்சின் மேலதிக செயலாளர் அஷ்ஷெய்க் எம்.அமீர்,சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா,அட்டாளைச்சேனை பதில் பிரதேச செயலாளர் நஹிஜா முஸாபீர்,கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் வை.ஹபிப்புல்லா,கல்முனை பிரதேச செயலக கணக்காளர், யூ.எல் ஜவாஹீர்,சம்மாந்துறை பிரதேச செயலக கணக்காளர் ஐ.எம் பாரிஸ்,கல்முனை மேல் நீதிமன்ற கணக்காளர் ஏ.எல்.ஏ நஜிமுத்தீன்,சாய்ந்தமருது உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஏ ஹமீட்,இறக்காமம் உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல் ஹம்சார் கல்முனை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம்.ரம்சான்,சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பழீல்,கல்முனை சமூத்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம் சாலீஹ் உட்பட உயர் அதிகாரிகள்,நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்