நிதி விடுவிப்பு தொடர்பான பிரேரணை:கட்சித் தலைவர் கூட்டத்தில் கலந்துரையாட தீர்மானம் -வீரசுமன வீரசிங்க

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான நிதி விடுவிப்பு தொடர்பான பிரேரணை தொடர்பில் அடுத்தவாரம் கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்துரையாட தீர்மானித்துள்ளோம்.

இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டால் திறைச்சேரி நிச்சயம் தேர்தல் நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என இலங்கை கம்யூனிச கட்சியின் பதில் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

எதிர்வரும் 19ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஒரு உறுதியான தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்க வேண்டும்.தேர்தலை பிற்போடும் ஜனாதிபதியின் முயற்சிக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளமை வரவேற்கத்தக்கது.

சர்வஜன வாக்குரிமை தொடர்பில் எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சபை ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளது. உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் நாட்டு மக்கள் விசேட கவனம் செலுத்தியுள்ளார்கள்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விடுவிக்காமல் இருக்கும் திறைச்சேரியின் செயற்பாடுகளுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

தேர்தல் நடவடிக்கைகளுக்கு நீதிமன்றத்தினால் எவ்வித தடையும் ஏற்படுத்தப்படவில்லை.தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் நீதித்துறை உள்ளது என்பதை தெளிவாக விளங்குகிறது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான நிதி விடுவிப்பு தொடர்பில் பாராளுமன்றத்திற்கு ஒரு பிரேரணையை கொண்டுவருவது தொடர்பில் எதிர்வரும் வாரம் இடம்பெறும் கட்சித் தலைவர் கூட்டத்தில் கலந்துரையாட தீர்மானித்துள்ளோம். இந்த நிதி விடுவிப்பு பிரேரணை நிறைவேற்றப்பட்டால் திறைச்சேரியால் நிதி விடுவிக்காமல் இருக்க முடியாது.

பாராளுமன்றத்திற்கு கொண்டு வரும் நிதி விடுவிப்பு தொடர்பான பிரேணைக்கு யார் ஆதரவாக செயற்படுகிறார்கள்,யார் எதிராக செயற்படுகிறார்கள் என்பதை நாட்டு மக்கள் அறிந்துக் கொள்வார்கள். தேர்தலை தடுக்கும் முயற்சிகள் அனைத்திற்கு எதிராக நிச்சயம் போராடுவோம் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.