சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் புதிய செயலி

சுற்றுலாப்பயணிகளுக்கு அவசியமான தகவல்களை வழங்குவதுடன் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலான சுற்றுலாத்துறைசார் செயலி ஒன்றை வடிவமைப்பதற்கு இலங்கை திட்டமிட்டுள்ளது.

அந்தச் செயலியில் பிரதான 7 மொழிகளில் அவசியமான அனைத்துத் தகவல்களும் உள்ளடக்கப்படும் அதேவேளை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புக்களின்கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள ஓட்டோக்களின் விவரங்களும் சேர்க்கப்படவுள்ளது.

சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதேவேளை, இலங்கையில் அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளக்கூடிய இடங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களும் அந்தச் செயலியில் உள்ளடக்கப்படுமென இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதேபோன்று கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கான நடைமுறைகள் பற்றிய விவரங்களும் அந்தச் செயலியில் உள்ளடக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சுற்றுலாத்துறைசார் செயலி இம்மாத இறுதியில் வெளியிடப்படுமெனவும், இதன் மூலம் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் செயன்முறை மேலும் இலகுபடுத்தப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.