அமெரிக்க திறைசேரியின் செயலாளருக்கும் ரணிலிற்கும் இடையில் கலந்துரையாடல்

அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஜேனட் எல். யெலன் மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடல் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

இதன்போது இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும், வலுவான மற்றும் நீடித்த மீட்சியை அடைவதற்குமான சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களுக்கு அமெரிக்காவின் ஆதரவை அவர் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இருதரப்பு உத்தியோகபூர்வ மற்றும் தனியார் கடன் வழங்குநர்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் இலங்கையின் அர்ப்பணிப்புகளை திறைசேரியின் செயலாளர் வரவேற்பதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்