மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் எச்.பி.திஸாநாயக்க காலமானார்

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் எச்.பி.திஸாநாயக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

1992 ஜுலை முதலாம் திகதி தொடக்கம் 1995 நவம்பர் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக எச்.பி.திஸாநாயக்க பதவி வகித்தார்.

மத்திய வங்கியின் ஆளுநராகப் பொறுப்பேற்றுக்கொள்வதற்கு முன்னர் இலங்கை சுங்கத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகப் பதவி வகித்த அவர், மத்திய வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றதன் பின்னர் 1995 – 1998 வரையான காலப்பகுதியில் பன்னாட்டு நாணய நிதியத்தின் பதில் நிறைவேற்றுப்பணிப்பாளராகவும் கடமையாற்றினார்.

நாட்டின் அரசதுறையில் அளப்பரிய சேவையாற்றிய எச்.பி.திஸாநாயக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது 85 ஆவது வயதில் காலமானார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.