நிதித்துறை நெருக்கடி முகாமைத்துவக் குழுவை தாபிக்க அரசாங்கம் நடவடிக்கை

அரச நிதி, கடன் மற்றும் சென்மதி நிலுவைகள் பிரச்சினைகளால் நிதித்துறைக்கு ஏற்படுகின்ற தாக்கத்தின் அடிப்படையில் நிதிநெருக்கடி ஏற்படுவதை தடுத்தல் மற்றும் அவ்வாறான நிதி நெருக்கடிகள் ஏற்படின் அதன் செலவுகளை குறைத்தல் மிகவும் முக்கியமாகும்.

அதற்கமைய, தற்போது இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ஆக்கபூர்வமான நெருக்கடி முகாமைத்துவம் மற்றும் காலத்தோடு தழுவிய தீர்மானங்களை எடுத்தல் அவசியமாகும்.

அதனால், இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதி விடயதானத்துக்குப் பொறுப்பான அமைச்சுக்கும் இடையில் நிதித்துறை நெருக்கடிக்கான தயார்படுத்தல் மற்றும் முகாமைத்துவம் தொடர்பாகவும், அவரவர் வகிபாகங்கள் தொடர்பாகவும் ஒருங்கிணைப்பை மேற்கொள்வதற்காக, நிதித்துறை நெருக்கடி முகாமைத்துவக் குழு மற்றும் நிதித்துறை நெருக்கடி முகாமைத்துவம் தொடர்பான தொழிநுட்பக் குழுவை தாபிப்பதற்கும், வங்கிகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்திற்கு தேவையான ஏற்பாடுகளை உட்சேர்ப்பதற்கும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.