மட்டு கல்லடியில் இருந்து கொழும்பிற்கு மாணிக்கக் கல்லை கடத்திச் சென்ற இருவர் கைது

மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் இருந்து கொழும்பிற்கு முச்சக்கரவண்டியில் மாணிக்கக் கல் ஒன்றை கடத்திச் சென்ற இருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (07) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கும்புறுமூலை சந்தியில் வாழைச்சேனை பொலிஸாருடன் புலனாய்வு பிரிவினர் சம்பவதினமான நேற்று இரவு கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன்போது, மட்டு கல்லடியில் இருந்து ஓட்டமாவடி நாவலடிசந்திவரை முச்சக்கரவண்டியில் சென்று அங்கிருந்து பஸ் மூலம் கொழும்பிற்கு சட்டவிரோதமாக மாணிக்கக் கல்லை கடத்தி செல்ல முற்பட்ட இருவரை கண்காணிப்பில் ஈடுபட்டுவந்த பொலிஸார் மடக்கிபிடித்து இருவரை கைது செய்ததுடன் சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக் கல்லையும் முச்சக்கரவண்டி ஒன்றையும் மீட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கல்லடி மற்றும் திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் அஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்