நவீன கைத்துப்பாக்கியுடன் சொத்தி உபாலியின் உறவினரான இளைஞர் பொரளையில் கைது!
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன கைத்துப்பாக்கியுடன் பாதாள உலகக் குழுவின் உறுப்பினர் என கூறப்படும் இளைஞர் ஒருவர்கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிரந்த கயான் (சொத்தி உபாலியின் மகன்) என்பவரின் உறவினர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, கொழும்பு, பொரளை பிரதேசத்துக்கு அருகில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
28 வயதுடைய சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மற்றும் கைத்தொலைபேசி என்பன மேலதிக விசாரணைகளுக்காக பொரளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன
கருத்துக்களேதுமில்லை