பாலின சமத்துவத்துடன் புத்தாக்கமும் தொழில்நுட்பமும் கருப்பொருளில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தில் மகளிர் தின நிகழ்வு…
(சுமன்)
பாலின சமத்துவத்துடன் புத்தாக்கமும் தொழில்நுட்பமும் எனும் கருப்பொருளில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தில் மகளிர் தின நிகழ்வு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் தலைமையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் வைத்திய அதிகாரிகள், தாதியர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பணியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மகளிர் தினத்தை சிறப்பிக்கும் முகமாகவும், பெண்களைக் கௌரவிக்கும் முகமாகவும் இன்றைய நிகழ்வில் உணவுப் பண்டங்கள் வழங்குவதிலிருந்து அனைத்து காரியங்களையும் ஆண்களே செய்தது சிறப்பாக அமைந்திருந்ததுடன், நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அனைத்து பெண்மணிகளுக்கும் மாங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.
அலுவலகத்தில் கடமை புரியும் பெண் உத்தியோகத்தர்களை சொந்த சகோதரிகளாக மதிப்பதை உறுதிசெய்வதில் கவனமெடுப்பதால் மிகப்பாதுகாப்பானதும், சுதந்திரமானதுமான அலுவலகத்தை உருவாக்கும் முகமான செயற்திட்டங்களும் இதன்போது மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை