ஏழு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

ஏழு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் மீண்டும் குறைத்துள்ளது.

அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த விலை குறைப்பு இன்று(வியாழக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோகிராம் காய்ந்த மிளகாய் 75 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 1500 ரூபாவாகும்.

ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 230 ரூபாவாக உள்ளது.

அத்துடன், ஒரு கிலோகிராம் சிவப்பு பருப்பின் விலை 19 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 339 ரூபாவாகும்.

ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 218 ஆக ரூபாவாகும்.

உள்ளூர் சிவப்பரிசி ஒரு கிலோகிராமின் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 155 ரூபாவாகும்.

ஒரு கிலோகிராம் உள்ளூர் நாட்டரிசி 7 ரூபாவாலும், பெரிய வெங்காயம் கிலோவொன்றின் விலை 6 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

அவற்றின் புதிய விலைகள் முறையே 188 ரூபாய் மற்றும் 129 ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.