யாழ்.சாவகச்சேரி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கூட்டுறவு தின விழா நிகழ்வு

யாழ்.சாவகச்சேரி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கூட்டுறவு தின விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் இன்று(09) இடம் பெற்றது.

சாவகச்சேரி பலநோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

சாவகச்சேரி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் கு.ஜனகன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கி.சந்திரசேகரன், தென்மராட்சி பிரதேச செயலர் உஷா சுபலிங்கம், தென்மராட்சி வலய ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் சோ.திருக்குமரன், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.பிரதீபன், யாழ்.மாவட்ட கூட்டுறவு சபை செயலாளர் த.ரமேஸ்குமார், ஓய்வுநிலை அதிபர் க.பத்மகாந்தன், சட்டத்தரணி சி.சிவபாலசுப்பிரமணியம் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது மூத்த உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டதோடு சேவையிலிருந்து இளைப்பாறிய பணியாளர்களும் கெளரவிக்கப்பட்டனர்.

மேலும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கான பரிசில்களும், கௌரவிப்பும் வழங்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.