உள்ளூராட்சிதேர்தலை நடத்தவேண்டும் – பௌத்த சாசன செயலணி ஜனாதிபதிக்கு கடிதம்
தேசிய மற்றும் இராஜதந்திர ஸ்திரதன்மைக்காக உள்ளூராட்சி தேர்தலை ஜனாதிபதி உடனடியாக நடத்தவேண்டும் என பௌத்தசாசன செயலணி வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் பௌத்தசாசன செயலணி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
அமைச்சர்கள் எண்ணிக்கையை 15ஆக மட்டுப்படுத்தவேண்டும் இராஜாங்க அமைச்சர்களை நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள பௌத்தசாசன செயலணி ஆடம்பர பொருள் இறக்குமதியை நிறுத்தவேண்டும் அந்த நிதியை தேர்தலிற்கு செலவிடவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.












கருத்துக்களேதுமில்லை