ரோகித ராஜபக்சவின் கடன் அட்டை மாயம் – அதனை பயன்படுத்தி மோசடி

மகிந்த ராஜபக்சவின் மகன் ரோகித ராஜபக்சவின் கடன் அட்டை காணாமல்போயுள்ளதாகவும் அதனை பயன்படுத்தி 400 அமெரிக்க டொலர் வரை மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் நாரஹன்பிட்டிய பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.

நபர் ஒருவர் ரோகிதராஜபக்சவின் கடன் அட்டையை பயன்படுத்தி நான்கு பரிமாற்றங்களில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனா.

இதேவேளை மார்ச் 3 ம் திகதி தான் தனது கடன் அட்டையை தொலைத்துவிட்டதாகவும் ரோகித ராஜபக்ச முறைப்பாடு செய்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்