வியாபார நிலையங்களின் பாதுகாப்பு சம்பந்தமாக விசேட கலந்துரையாடல்

பாறுக் ஷிஹான்
வியாபார நிலையங்களின் பாதுகாப்பு சம்பந்தமாக விசேட கலந்துரையாடல்  கல்முனை தலைமையக பொலிஸாரின் ஏற்பாட்டில் சனிக்கிழமை(11)  முற்பகல்  இடம்பெற்றது.
இருதயநாதர் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலானது  கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது அம்பாரை மாவட்ட  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்நாயக்க  பிரதம அதிதியாக  கலந்து கொண்டு  கல்முனை மாநகர வர்த்தகர்கள்  தற்போது முகம் கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் விழிப்பூட்டல்  கலந்துரையாடலை மேற்கொண்டார்.மேலும் இக்கலந்துரையாடலில்  எதிர்காலத்தில்  வர்த்தக நிலையங்களில்  எடுக்கப்படவேண்டிய பாதுகாப்பு  நடவடிக்கை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
 அத்துடன் பொதுச்சந்தை வர்த்தகர்கள் நகை கடை உரிமையாளர்கள் கைத் தொலைபேசி கடை உரிமையாளர்கள் பல்பொருள் கடை அங்காடி வியாபாரிகள் உள்ளிட்ட ஏனைய வர்த்தகர்களும்  இக்கலந்துரையாடலில் பங்கு பற்றி தத்தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுடன் தமது நலனில் அக்கறை எடுத்து செயற்படவுள்ள கல்முனை தலைமையக பொலிஸாருக்கு நன்றிகளையும் தெரிவித்து கொண்டனர்.
மேலும் வர்த்தகர்களுக்கு  ஏற்படும் பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்பதற்கு 0718591161 அல்லது 0672229226  என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டனர்.
மேற்படி கலந்துரையாடலில் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும்  பிரதம பொலிஸ் பரிசோதகருமான  அலியார் றபீக் கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகரும் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியுமான ஏ.எல்.ஏ.வாஹிட்   கல்முனை விசேட அதிரடிப்படை முகாம்   பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்னாயக்க கல்முனை  இராணுவ முகாம்  பொறுப்பதிகாரி     என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.