மாபெரும் குருதிக்கொடை நிகழ்வு ஆலங்குளாயில் நேற்று நடந்தது!

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் பழைய மாணவரும் புகழ்பூத்த விளையாட்டு வீரருமாகிய அமரர் ச.சதீஸ்கண்ணாவின் ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தினரின் நிதி அனுசரணையில் மாபெரும் குருதிக்கொடை நிகழ்வு சண்டிலிப்பாய் ஆலங்குளாய் சனமூக நிலையத்தில் நேற்று (சனிக்கிழமை)
காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை சிறப்புற நடைபெற்றது.

வடக்கின் ஒரேயொரு புற்றுநோய் வைத்தியசாலையாகிய தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் வகையில் இந்தக் குருதிக்கொடை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு, 45 இற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் இந்த உன்னதமான உயிர்க்கொடை நிகழ்வில் பங்குகொண்டனர்.

இந்த நிகழ்வை சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றும் சி.கஜன் ஒழுங்கமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்