முன்னாள் முதல்வரினால் கல்முனை ஸாஹிராக் கல்லூரிக்கு கணிணி அன்பளிப்பு
பாறுக் ஷிஹான்
கல்முனை ஜாஹிரா கல்லூரி தேசிய பாடசாலைக்கு கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் கணனி இயந்திரம் ஒன்றினை அன்பளிப்பு செய்துள்ளார்
இது தொடர்பான நிகழ்வு நேற்று முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் இல்லத்தில் இடம் பெற்றது
இந் நிகழ்வில் இக் கல்லூரியின் அதிபர் எம் ஐ ஜாபிர் ஆசிரியர்களான ஏ.எல்.எம். றிசான், எம். ஜின்னா மற்றும் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எம். இஸ்மாயில் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மெற்றோ பொலிட்டன் கல்லூரியின் அனுசரனையில் இடம்பெற்ற ” மெற்றோ பொலிட்டன் ஸஹ்ரியன் பிரிமியன் லீக் ZPL Season ll ” சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் மெற்றோ பொலிட்டன் கல்லூரியின் தவிசாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களிடம் இக் கல்லூரியின் அதிபர் ஜனாப் .எம்.ஐ. ஜாபிர் அவர்களினால் கணிணி ஒன்றின் தேவை கருதி விடுக்கப்பட்ட வண்டுகோளை ஏற்றுக் கொண்ட கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இந்த கணிணி தொகுதியை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துக்களேதுமில்லை