யாழ். சாவகச்சேரி “பாரதி பாலர் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா
யாழ். சாவகச்சேரி “பாரதி பாலர் முன்பள்ளி”யின் வருடாந்த விளையாட்டு விழா முன்பள்ளி வளாகத்தில் நேற்று (11) இடம்பெற்றது.
முன்பள்ளியின் முகாமைத்துவ தலைவர் சு.டினேஸ்குமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக ஊடகவியலாளரும், தமிழ் இணையக் கல்விக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும், சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தருமான க.ரஜனிகாந்தன் கலந்து சிறப்பித்தார்.
சிறப்பு விருந்தினராக சாவகச்சேரி அமிர்தாம்பிகை வித்தியாலய அதிபர் தர்சனி வசந்தமாறனும், கௌரவிருந்தினராக சமுர்த்தி உத்தியோகத்தர் துஸ்ஷானி சதீஸூம் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது சிறார்களின் பல்வேறு குழு விளையாட்டுக்கள் இடம் பெற்றன.
மேலும், சிறார்களின் இசையும் அசைவும் நிகழ்வும், வினோத உடை நிகழ்வும் சபையோரைக் கவர்ந்தன.
கருத்துக்களேதுமில்லை