இலங்கைக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ள IMF – ரூபாவின் பெறுதியில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கைக்கான கடன் வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியம் கிட்டத்தட்ட ஒப்புதல் அளித்துள்ள நிலையில், உள்நாட்டு பொருளாதார நிர்வாகம் தொடர்பான சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய வங்கியால் பணம் அச்சிடுவது கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட முதல் விடயமாகும். அதற்கு நிதி வரம்பு விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ரூபாவின் வீழ்ச்சியைத் தடுப்பதற்காக, மத்திய வங்கியும் டொலர்களை செலவழிக்க ஒரு குறிப்பிட்ட வரம்பை விதிக்கவுள்ளது.

ரூபாவின் மதிப்பு சுதந்திரமாக தீர்மானிக்கப்பட வேண்டும் என்பது நாணய நிதியத்தின் கொள்கையாகும். அவ்வாறு செய்தால் ஒரு டொலருக்கான ரூபா மதிப்பு மீண்டும் உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அனைத்து கட்டுப்பாடுகளுக்கு மேலதிகமாக, தவறான தகவல்களை சமர்ப்பித்து நாட்டின் நலன்புரி நன்மைகளை பெறும் நபர்களை நீக்குமாறு சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்த அறிவுறுத்தல்களுக்கு உட்பட்டால், இலங்கைக்கான 29 கோடி அமெரிக்க டொலர் கடனை சர்வதேச நாணய நிதியம் அங்கீகரிக்கும். அதற்கான இயக்குநர்கள் குழு கூட்டம் இம்மாதம் 20ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.