பேராதனையில் புதையல் தோண்டிய இரு பெளத்த துறவிகள் கைது

பேராதனை கன்னொறுவா பிரதேசத்தில் புதையல் தோண்டும் பணியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் இரண்டு மத குருக்கள் நேற்று (11) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது அவர்களிடமிருந்த மண் அகழும் உபகரணத் தொகுதிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைதான இருவரும் கன்னொறுவா பிரதேசத்தை சேர்ந்த விகாரை ஒன்றை சேர்ந்த 30 மற்றும் 58 வயதுடைய இரண்டு பௌத்த துறவிகளாவர்.

குறித்த இரு சந்தேக நபர்களை கண்டி நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதோடு, பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்