விரைவில் புதிய தமிழ்க் கூட்டணி உருவாக்கப்படும்: இராதாகிருஷ்ணன்

புதிய தமிழ்க் கூட்டணி ஒன்றை அமைப்பதற்கான முயற்சி தற்போது முன்னெடுக்கப்படுகின்றது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மஸ்கெலியாவில், மலையக மக்கள் முன்னணி தலைமையில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

தமிழ் முற்போக்குக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஏனைய அமைப்புக்களை ஒன்றிணைத்து புதிய தமிழ்க் கூட்டணி அமைக்கப்படவுள்ளது.

தமிழ் மக்களுடைய ஒட்டுமொத்த பிரச்சினைகளையும் உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கும் தெரியப்படுத்துவதே அதன் முக்கிய நோக்கமாகும் எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.