காங்கேசன்துறை பகுதியில் கைக்குண்டு மீட்பு!

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீமன்காமம் பகுதியில் கண்ணிவெடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கண்ணிவெடி தனியாருக்கு சொந்தமான வெற்றுக் காணி ஒன்றில் மண்ணில் புதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அன்ரனிபுரம் பகுதியில் கடலில் கரையொதுங்கிய நிலையில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

காங்கேசன்துறை பொலிஸார் இது தொடர்பாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், நீதிமன்றத்தின் நடவடிக்கையின் பின்னர் அந்த வெடிபொருள்களை மீட்டு செயலிழக்க செய்யவுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.