சாவகச்சேரி குடும்பமட்ட முன்பள்ளிகளின் விளையாட்டு விழா!

சாவகச்சேரி குடும்பமட்ட முன்பள்ளிகளின் விளையாட்டு விழா யா/ சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரி மைதானத்தில் நேற்று(12) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் விருந்தினர்களாக, தென்மராட்சி வலயக் கல்வி அலுவலக கணக்காளர் சுதர்சினி ரஜீக்கண்ணா, தமிழ் இணையக் கல்விக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும், சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தருமான க.ரஜனிகாந்தன், அமெரிக்கன் சிலோன் மிஷன் திருச்சபையின் அருட்பணி வ.ஆனந்த் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.

இந்த விளையாட்டு விழாவில், பூவேந்தன் முன்பள்ளி, பாரதி முன்பள்ளி, உதய சூரியன் முன்பள்ளி, பண்டிதமணி முன்பள்ளி, தேனுஜா முன்பள்ளி, அம்பாள் முன்பள்ளி மற்றும் தூய தோமஸ் முன்பள்ளி ஆகிய முன்பள்ளிகள் பங்கேற்றிருந்தன.

நிகழ்வில், பழம் பொறுக்கல், தடை தாண்டல், சுரங்கத்தினூடாக செல்லல், சொத்துச் சேர்த்தல் கயிறு இழுத்தல், வட்ட அஞ்சல், வேடந்தாங்கல் ஆகிய போட்டிகள் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றியீட்டிய மழலைகளுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்