யா/ மீசாலை விக்கினேஸ்வர மகா வித்தியாலய மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு நிகழ்வு!

யா/ மீசாலை விக்கினேஸ்வர மகா வித்தியாலய மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு நிகழ்வு இன்று(13) இடம்பெற்றது.

இதன்போது பிரான்ஸ் – பழைய மாணவர் ஆசிரியர் சங்கத்தால், உயர்தரத்தில் கல்வி பயிலும் கல்வி ஊக்குவிப்பு தேவையுடைய 5 மாணவர்களுக்கான ஊக்குவிப்புத் தொகை வழங்கி வைக்கப்பட்டது.

மாதாந்தம் மூவாயிரம் ரூபா வீதம் மாணவர் ஒருவருக்கு தலா 72 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படவுள்ளது.

இந்த மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி பயிலும் 2 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக இந்த ஊக்குவிப்பு தொகை மாதாந்தம் வழங்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் பாடசாலையின் அதிபர் சுதாமதி தயாபரன், உப அதிபர் கோடீஸ்வரன், பழைய மாணவர் சங்க செயலாளர் க.ரஜனிகாந்தன் ஆகியோர் கலந்து கொண்டு ஊக்குவிப்புத் தொகையை வழங்கி வைத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்