கொக்கேய்னை ‘சூப்’ கட்டி போன்று பொதி செய்து கொண்டுவந்த வெளிநாட்டுப் பிரஜை கைது!

350 கிராம் கொக்கேய்னுடன் மெசிடோனிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்  சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் இன்று (13) கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரேஸிலிலிருந்து வந்த மெசிடோனிய பிரஜையின்  சந்தேகத்துக்குரிய நடத்தை காரணமாக தடுத்து  நிறுத்தப்பட்டு அவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக  சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தச் சோதனையின்போது அவரது பை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொக்கேய்ன் கைப்பற்றப்பட்டது.

நான்கு பொதிகளில்  இவை வைக்கப்பட்டு சூப் பொதிகள் போன்று பொதி செய்யப்பட்டிருந்ததாக சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த போதைப்பொருளின் பெறுமதி  சுமார் இரண்டு கோடி ரூபா  என   சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.