கசிப்பு போத்தல்களுடன் லொறியில் சென்ற பொதுஜன ஐக்கிய பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் கைது!

இம்முறை உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன ஐக்கிய பெரமுன சார்பில் சிலாபம் உள்ளூராட்சி சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , கடந்த ஞாயிற்றுக்கிழமை மாதம்பே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மாதம்பே பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடையவர். உடலவெல பிரதேசத்தில் வீதித் தடையில் அவர் பயணித்த சிறிய லொறியை பொலிஸார் சோதனையிட்டபோதே கசிப்பு கைப்பற்றப்பட்டதுடன் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்முறுவ பிரதேசத்தில் உள்ள ஒருவருக்கு விற்பனை செய்வதற்காக லொறியில் மாதம்பேயிலிருந்து இந்தக் காசிப்பு போத்தல்களை கொண்டு சென்று கொண்டிருந்தபோதே இவை கைப்பற்றப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.