சாய்ந்தமருது கடற்கரையில் மண்ணில் புதையுண்ட நிலையில் மிதிவெடி மீட்பு

கடற்கரைப் பகுதியில் மண்ணில் புதையுண்ட நிலையில் மிதிவெடி ஒன்று இனங்காணப்பட்டுள்ளது.

குறித்த மிதிவெடி இனங்காணப்பட்ட நிலையில் அது தொடர்பாக அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப்பகுதில் இன்று (14) காலை இனங்காணப்பட்ட குறித்த மிதிவெடி பழையதா அல்லது வேறு இடம் ஒன்றில் இருந்து எடுத்து வரப்பட்டுள்ளதா என்ற விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் வழங்கிய தகவலுக்கமைய குறித்த மிதிவெடி மீட்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.