கல்முனை மாநகர நிதி மோசடிக்கெதிராக ஆர்ப்பாட்டம்

பாறுக் ஷிஹான்
தேசிய மக்கள் சக்தியின் கல்முனை செயற்பாட்டாளர்களினால் கல்முனை மாநகர சபையில் வரிப்பண மோசடியுடன் தொடர்புடையவர்களை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் திங்கட்கிழமை (13) மாலை  கல்முனை பஸ்தரிப்பு நிலையத்துக்கு அருகாமையில்   இடம்பெற்றது.
கல்முனை மாநகரசபையில் இடம் பெற்ற நிதி மோசடி மற்றும் மின்சாரக்கட்டண அதிகரிப்பு, வாழ்க்கை செலவு அதிகரிப்பு, தேர்தலை பிற்போடல், நாட்டில்  ஜனநாயகத்தை நிலைநாட்டல் தொடர்பாக   பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
இப்போராட்டமானது தேசிய மக்கள் சக்தியின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.ஆதம்பாவா தலைமையில் பொதுமக்கள்  பலரும் ஒன்றிணைந்து முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.