இலங்கை 2023ஆம் ஆண்டை நல்லிணக்க மீட்சிக்கான ஆண்டாக அடையாளப்படுத்துகிறது: அருணி விஜேவர்தன

இலங்கையில் 2023 ஆம் ஆண்டை நல்லிணக்கம், மீட்சி மற்றும் தேசிய ஒற்றுமைக்கான ஆண்டாக அடையாளப்படுத்தியுள்ளதாக வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய தினத்தை முன்னிட்டு வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவால் சமாதானத்துக்கான பொதுநலவாய தேசியக் கொடி ஏற்றிவைக்கப்பட்டுள்ளது.

மேற்படி நிகழ்வில் கலந்துகொண்டு வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகளின் பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் கொள்கைகளுக்கு இலங்கையின் அர்ப்பணிப்பை அடையாளப்படுத்தும் வகையில், வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அமைதிக்கான கூட்டு அர்ப்பணிப்பாக உறுப்பு நாடுகளால் அமைதிக்கான பொதுநலவாய நாடுகளின் கொடியை ஏற்றுவது, பொதுநலவாயச் செயலகத்தால் இந்த ஆண்டு ‘நிலையான மற்றும் அமைதியான பொது எதிர்காலத்தை உருவாக்குதல்’ என்ற தொனிப்பொருளின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு முயற்சியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.