புகையிரத திணைக்கள ஊழியர்கள் அனைவரினதும் விடுமுறைகள் மறுஅறிவித்தல் வரை இரத்து

இலங்கை புகையிரத திணைக்கள ஊழியர்கள் அனைவரினதும் விடுமுறைகள் இன்று முதல் மறுஅறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குனவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி வெளியிட்பட்ட அரசாங்க அதிவிசேட வர்த்தமானி இலக்கம் 2321/07 இன்படி, அத்தியாவசிய பொது சேவையாக இலங்கை புகையிரத திணைக்களம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், 1979 ஆம் ஆண்டு 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் பிரகாரம் அத்தியாவசிய பொது சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இலங்கை புகையிரத திணைக்கள சேவையின், அனைத்து ஊழியர்களினதும் விடுமுறையை இன்று (14) முதல் உடன் அமுலாகும் வகையில் இரத்து செய்வதற்கு தொடரூந்து பொது முகாமையாளர் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் 24 மணிநேர தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு லோகோமோட்டிவ் ரயில் சாரதிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கை மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்