அஞ்சல் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனம் : வர்த்தமானி வெளியீடு

அஞ்சல் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நாளை புதன்கிழமை (15) பல்வேறு துறைசார் தொழிற்சங்கங்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் , நேற்று திங்கட்கிழமை (13) ஜனாதிபதியினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

1979ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொது சேவை சட்டத்தின் 2ஆம் பிரிவிற்கமைய ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பிரகாரம் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் அண்மையில் மின்சாரம் , போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய சேவைகள் ஜனாதிபதியால் அத்தியாவசிய சேவையானப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

எவ்வாறிருப்பினும் நாளைய தினம் அனைத்து தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.