கிழக்கில் சதுப்பு நில தாவரங்களை வளர்க்க ஐக்கிய அரபு இராச்சியம் தீர்மானம்

கிழக்கு கடற்பரப்புக்களில் சதுப்பு நில தாவரங்களை வளர்க்க ஐக்கிய அரபு இராச்சியம் தீர்மானித்துள்ளது.

2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் மற்றும் உலகின் மிக மதிப்புமிக்க கடல் பகுதிகளில் 10 மில்லியன் சதுப்புநில தாவரங்களை வளர்ப்பதற்கான ஒரு சிறந்த திட்டத்தை ஐக்கிய அரபு இராச்சியம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்த செயற்திட்டத்தில் கிழக்கு மாகாணத்தின் கடல் பகுதியும் உள்ளடங்கும் என இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் காலீத் நாஸர் சுலைமான் அல் அமீரி தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்துடனான சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்