தொழிற்சங்க போராட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு – இடதுசாரி ஜனநாயக மக்கள் முன்னணி

அரசாங்கத்தின் முறையற்ற வரி கொள்ளை, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட பொது காரணிகளை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படும் தொழிற்சங்க போராட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை அமுல்படுத்தினால் சமூக கட்டமைப்பில் போராட்டங்கள் மாத்திரமே மிகுதியாகும் என இடதுசாரி ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

தொழிற்சங்க போராட்டம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை அமுல்படுத்தினால் சமூக கட்டமைப்பில் போராட்டங்கள் மாத்திரமே மிகுதியாகும்.

அரசாங்கத்தின் முறையற்ற வரி கொள்கை , அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட பொது காரணிகளை முன்னிலைப்படுத்தி தொழிற்சங்கத்தினர் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு முழுமையான ஆதரவு வழங்குவோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னிச்சையாக செயற்படுத்துவதை விடுத்து, தொழிற்சங்கத்தினருடன் இணக்கமாக செயற்பட வேண்டும்.

அமைச்சரவை அமைச்சர்கள் உட்பட அரசியல்வாதிகளின் வரபிரசாதங்களை மட்டுப்படுத்துவதற்கான தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.

அரசியல் தொடர்பில் நாட்டு மக்கள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வழிமுறைகள் அனைத்தும் தற்போது முடக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறுவது சாத்தியமற்றதன்மையில் உள்ளது.

தேர்தல் செயற்பாடுகளை ஜனாதிபதி தந்திரமான முறையில் தடுத்துள்ளார்.தற்போதைய நிலையில் தேர்தல் ஒன்று இடம்பெற்றால் அரசாங்கம் படுதோல்வி அடையும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.