கொழும்பில் மற்றுமொரு பெண் மர்மமான முறையில் மரணம்

கொழும்பின் புறநகர் பகுதியான பிலியந்தலை சுவரபொல வீடொன்றில் கைகள் துணியால் கட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரது சடலம் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

27 வயது திருமணமான பெண்ணே மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கணவருடன் முரண்பாடு ஏற்படுத்திக் கொண்டு தாய் வீட்டுக்கு வந்த பெண் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.