ஐக்கிய இராச்சியத்தில் ஒலித்த சிங்கள பாடல்

ஐக்கிய இராச்சியத்தில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் நடைபெற்ற பொதுநலவாய தினத்துக்கான 2023 ஆம் ஆண்டுக்கான கொண்டாட்ட சேவையில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு கலைஞர்கள் சிங்கள பாடலை பாடியுள்ளனர்.

ரோஷனி அபே மற்றும் நுவான் பெரேரா ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர்.

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இந்த இரண்டு கலைஞர்களும், பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவுகளைக் குறிக்கும் வகையிலும், இந்த ஆண்டு பெப்ரவரியில் கொண்டாடப்பட்ட இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை கௌரவிக்கும் வகையிலும் அனகத்தே என்ற பாடலை பாடியுள்ளனர்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், பிரித்தானிய மன்னர், ராணி மற்றும் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் முன்னிலையில், நியூஸிலாந்து, ருவாண்டா, சைப்ரஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களும் இசை நிகழ்வுகளை நடத்தியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்