பணத்திற்காக பாட்டியை கொடூமாக கொலை செய்த பேரன்

காலி, பிடிகல பிரதேசத்தில் பணத்துக்காக பாட்டியை கொலை செய்த பேரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

87 வயதான பாட்டியின் முகத்தில் மிளகாய் பொடியை வீசி கைகளை கட்டி கொலை செய்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

அத்துடன் பாட்டியிடம் இருந்த 4 ஆயிரத்து 340 ரூபா பணத்தை கொள்ளையடித்து சென்ற பேரன் கைது செய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பாட்டி பணத்தை பிளாஸ்டிக் பையில் போட்டு இடுப்பில் மறைத்து வைத்திருந்த நிலையில் சந்தேகநபர் பணத்தை திருடியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

பிடிகல தலகஸ்வல பகுதியைச் சேர்ந்த ஜி. கமலாவதி என்ற வயோதிப பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்