இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் சிறப்புப் பட்டிமன்றம்!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ் கலாசார மண்டபத்தில் சிறப்புப் பட்டிமன்றம் நேற்று (14) இடம்பெற்றது.

“இளம் சமுதாயத்தை வழிநடத்த வேண்டிய பொறுப்பு, பெற்றோருக்கே! சமூகத்துக்கே! என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது.

இந்தியாவின் பிரபல பட்டிமன்றம் பேச்சாளர் கவிதா ஜவகர் நடுவராகக் கலந்து கொண்ட பட்டிமன்றத்தில், “பெற்றோருக்கே!” என்ற தலைப்பில் செந்தமிழ்ச் சொல்லருவி ச லலீசன், மதன் கோசலை ஆகியோரும், “சமூகத்திற்கே!” என்ற தலைப்பில், ந.விஜய சுந்தரம், தயாளினி குமாரசாமி ஆகியோரும் பங்கேற்றனர்.

நிகழ்வில் இந்திய துணை தூதர் ராகேஷ் நட்ராஜ், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வட மாகாண அவைத் தலைவர் சி.வி.கே்சிவஞானம், யாழ் மாநகர சபை முன்னாள் மேஜர் வி.மணிவண்ணன், யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி உட்பட பலரும் பார்வையாளர்களாக கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்