தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கங்கள் இணைந்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்!

நூருல் ஹுதா உமர்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து; அவைகளை உடனடியாக தீர்க்குமாறு வலியுறுத்தியும் இன்று (2023.03.15) (வியாழக்கிழமை) இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தனது தொடர் போராட்டத்தின் ஒரு அங்கமாகவும், கல்விசார ஊழியர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர். இப்போராட்டமானது பல்கலைக்கழக முற்றலில் இடம்பெற்றது.

பல்கலைக்கழக கல்வி சாரா பணியாளர்களின் பிரச்சனைக்கு உடனடி தீர்வு வேண்டும், மின்சாரம் எரிபொருள் எரிவாயு பொருட்களின் விலைகளை குறை, நியாயமற்ற வரிக் கொள்கையை உடனடியாக திருத்து, சம்பள முரண்பாட்டினை தீர்க்கும் குழுவின் அறிக்கையினை உடனடியாக நடைமுறைப்படுத்து, அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீளவும் திறந்து கல்வி உரிமையை உறுதிப்படுத்து, பல்கலைக்கழக விவகாரங்களில் கல்வி அமைச்சரின் மௌனம் ஏன், மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது கைவைக்காதே, ஆட்சேர்ப்பு நடவடிக்கை முறையை உடனடியாக உருவாக்கு, பல்கலைக்கழக ஊழியர்களின் இல்லாமலாக்கப்பட்ட ஊதியத்தை உடனடியாக வழங்கு  போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் அரசாங்கத்தின் நியாயமற்ற வரிக்கொள்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பல்வேறு பதாதைகளையும்  தாங்கியிருந்தனர்.

நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புக்கள் இன்று (15) புதன்கிழமை முன்னெடுத்துள்ள  தொழிற்சங்க நடவடிக்கைகளின் காரணமாக பல்வேறு அரச நிருவனங்களைப்போல் தென்கிழக்கு பல்கலைக்கழகமும் கல்வி உள்ளிட்ட நடவடிக்கைகள் முடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.