ரிதம் சனமூக நிலைய பல்தேவைக் கட்டிட திறப்பு நிகழ்வு…

ரிதம் சனமூக நிலைய பல்தேவைக் கட்டிடத்தின் திறப்பு நிகழ்வு இன்றைய தினம் சனசமூக நிலையத்தின் செயலாள மேகலிங்கம் துதிகரன் தலைமையில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.மதிவண்ணன், பிரதம கணக்காளர், கால்நடை வைத்திய அதிகாரி, நிருவாக உத்தியோகத்தர், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள், மாநகரசபை உத்தியோகத்தர்கள், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ரவிச்சந்திரன், ரிதம் சனசமூக நிலைய உபதலைவர் எம்.சிவஞானம், உபசெயலாளர் திருமதி வாசுகி நடேசராஜா உள்ளிட்ட சனசமூக நிலையத்தின் உறுப்பினர்கள், ரிதம் இளைஞர் கழகத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ரிதம் சனசமூக நிலையத்தினரின் வேண்டுகோளுக்கு அமைவாக மண்முனை வடக்குப் பிரதேச செயலாளரின் ஒத்துழைப்பு மூலம் காணி பெறப்பட்டு, மாநகரசபை உறுப்பினர் அந்தோனி கிருரஜன் அவர்களின் வட்டார நிதி ஒதுக்கீட்டினூடாக 8.4 மில்லியன் நிதியின் மூலம் மேற்படி கட்டிடம் அமைக்கப்பட்டு இன்றைய தினம் திறப்பு விழா மேற்கொள்ளப்பட்டு ரிதம் சனசமூக நிலையத்தினரிடம் கட்டிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

தேர்தல் அறிவிப்பினால் மேற்படி நிகழ்வில் இக்கட்டிடம் அமையக் காரணமாக இருந்த வட்டார உறுப்பினரோ, மாநகரசபையின் முதல்வர் உட்பட உறுப்பினர்கள் எவருமே பங்குபற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.