நாமல் ராஜபக்ஷ ஓர் அரசியல் அறிவில்லா ‘புரொய்லர் கோழி’ – விமல் வீரவன்ஸ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, எந்தவித அனுபவமோ, அரசியல் அறிவோ இல்லாத புரொய்லர் இறைச்சிக்கோழி என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ விமர்சித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட விமல் வீரவன்ஸ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

, மக்கள் துன்பப்படும் வேளையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் நாமல் ராஜபக்ஷ கிரிக்கட் விளையாடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், நாமல் ராஜபக்ச ரணிலைப் போன்று செயற்படுவது மாத்திரமின்றி இதுவரை எதையும் கற்றுக்கொள்ளவில்லை எனவும் கூறினார்.

அவர் ஒருபோதும் கற்றுக் கொள்ள மாட்டார் என்றும் காலத்துக்கு முந்தியே வளர்ந்த புரொய்லர் கோழி என்றும் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டார்.

நாட்டினதும் ராஜபக்ச குடும்பத்தினதும் வீழ்ச்சிக்கு இந்த விடயங்களே காரணமாகும் எனவும் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டார்.

கடந்த பொதுத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் யோஷித ராஜபக்சவை களமிறக்க ராஜபக்ச குடும்பத்தினர் திட்டமிட்டிருந்தனர்.

எனினும், டலஸ் அழகப்பெருமவே அதனை நிறுத்துமாறு கோட்டாபய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்தார் என்றும் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.