கடமைக்கு சமுகமளிக்காத அரச உத்தியோகத்தர்களுக்கு மனிதவலு மற்றும் வேலை வாய்ப்புத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

முறைப்படி விடுமுறையை அறிவிக்காது புதன்கிழமை பணிக்கு சமுகமளிக்காத அனைத்து அரச உத்தியோகத்தர்களினதும் விடுமுறை சம்பளமற்ற விடுமுறை நாளாகவே கருதப்படும் என மனிதவலு மற்றும் வேலை வாய்ப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மனிதவலு மற்றும் வேலை வாய்ப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுஷா கோகுல பெர்னாண்டோவால் அனைத்து அரச திணைக்களங்களின் பிரதானிகளுக்கும் செவ்வாய்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதவலு மற்றும் வேலை வாய்ப்புத் திணைக்களத்தின் கீழ் பணிபுரியும் சகல உத்தியோகத்தர்களும் 15 ஆம் திகதி பணிக்கு சமுகமளிக்க வேண்டும்.

மனிதவலு மற்றும் வேலை வாய்ப்புத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் பணிபுரியும் அதிகாரிகளுடன் இணையவழி மெய்ந்நிகர் ஊடாக விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இதன் போது ஒவ்வொரு ஊழியர்களும் கட்டாயம் பணிக்கு சமுகமளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது என அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு சகல ஆணையாளர்களும் தமது நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் உத்தியோகத்தர்களுக்கு இந்த அறிவித்தலை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதோடு, இது தொடர்பில் சகல வலய, மாவட்ட, துணை , பொறியியல் அலுவலகங்களுக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தொழில் மற்றும் வெளிநாட்டு தொழில் வாய்ப்பு அமைச்சின் கீழ் மாவட்டங்கள் மற்றும் பிரதேச அலுவலகங்களுக்கு உரித்தான சகல அபிவிருத்தி உத்தியோகத்தர்களது களப்பணிகள் இரத்து செய்யப்படுவதோடு, அவர்கள் அனைவரும் தத்தமது அலுவலகங்களுக்கு சமுகமளிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.