ஹரக்கட்டாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு!

மடகஸ்காரிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நந்துன் சிந்தக விக்ரமரத்ன என்ற ஹரக்கட்டாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஹரக்கட்டாவின் தந்தையான நெல்சன் மேர்வின் விக்ரமரத்னவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. பொது பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபர், மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்டோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

நடுன் சிந்தக அல்லது “ஹரக்கட்டா” மற்றும் சலிந்து மல்ஷிகா அல்லது “குடு சலிந்து” ஆகியோரிடம் ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ள நிலையிலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்