சிவனொளிபாத மலைக்குச் செல்பவர்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும் – சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிவனொளிபாத மலைக்கு வணக்க வழிபாடுகளுக்காக சென்றிருந்த நான்கு யாத்திரிகர்கள் உணவு விஷம் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப் படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேலும் 10 பேர் உணவு விஷம் மற்றும் பக்டீரியா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர் என பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண மேலும் தெரிவித்தார்.

இதனிடையே சிவனொளிபாதமலைக்கு வழிபாடுகளுக்காக செல்பவர்கள் மற்றும் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளும் அனைத்து தரப்பினரும் ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்ற வேண்டும்.

மேலும் மலைக்குச் செல்பவர்கள் முடிந்த வரையில் கொதிக்க வைத்த நீரை தங்கள் வீடுகளில் இருந்து எடுத்துச்செல்ல வேண்டும் என அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.