அனுமதிப்பத்திரம் இல்லாது மரக்குற்றிகளை கொண்டு சென்றவர் கைது

அனுமதிப் பத்திரம் இல்லாமல் மலைவேம்பு மரத்தை வெட்டி எடுத்துச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உழவு இயந்திரம் மற்றும் மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் யாழ். ஆஸ்பத்திரி வீதியில் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரத்திற்கும் எந்தவொரு ஆவணங்களும் இல்லை எனவும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும், கைப்பற்றப்பட்ட பொருட்களையும் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.