முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 155 ஓட்டங்கள்

இலங்கைக்கு எதிராக வெலிங்டனில் இன்று(17) ஆரம்பமான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் நியூஸிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 155 ஓட்டங்களை ஆட்டநேர முடிவில் பெற்றிருந்தது.

மழை காரணமாக ஆட்டத்தின் பெரும்பாலான நேரம் தடைப்பட்டதுடன் இன்று(17) 48 ஓவர்களை மாத்திரமே வீசமுடிந்தது.
டொம் லதம் 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க டெவோன் கொன்வே 78 ஓட்டங்களைப் பெற்றார்.

கேன் வில்லியம்ஸன் 26 ஓட்டங்களுடனும் ஹென்ரி நிகோல்ஸ் 18 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

கசுன் ராஜித, தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்