”பெண்களுக்கு முக்கியத்துவம் சம உரிமை கொண்ட சபையாக வலி மேற்கு பிரிதேச சபை செயல்பட்டுள்ளது”

பெண்களுக்கு முக்கியத்துவம் சம உரிமை கொண்ட சபையாக வலி மேற்கு பிரிதேச சபை செயல்பட்டுள்ளது. இது வேற எந்த சபையிலும் இடம் பெறவில்லை.

இதற்கு ஒத்துழைப்பு நல்கிய தவிசாளர் ,செயலாளர் உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் என வலிமேற்கு பிரதேச சபையின் பெண் உறுப்பினர்கள் தெரிவித்தார்கள்.

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் இறுதி கூட்டம் வியாழக்கிழமை காலை தவிசாளர் நடனேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

உள்ளூராட்சி சபையின் 61 ஆவது சபை கூட்டமும் இறுதி கூட்டமும் நடைபெற்றபோது கடந்த ஐந்து ஆண்டுகளில் இடம்பெற்ற அமர்வுகள், செயற்பாடுகள் தொடர்பாகவும் உறுப்பினர்கள் உரை இடம்பெற்ற போதே அவர்கள் இதனைத் தெரிவித்தார்கள்.

மேலும் அவர்கள் உரையாற்றும்போது –

பல உள்ளூராட்சி மன்றங்களில் கூட்ட அமர்வுகள் நடைபெற்ற போது பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படாததும் அவர்களது கருத்துக்கள் உங்வாங்கப்படாது அறிக்கையில் இணைக்கப்படாத நிலை காணப்பட்டது.

இது பெண் உறுப்பினர்களது கருத்துக்களின் வெளிப்பாடாகும் ஆனால் எமது வலிமேற்கு பிரதேச சபையில் பெண் உறுப்பினர்களுக்கு அனைத்து வழிவகைகளிலும் முன்னிரிமையும் சம உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன.

எந்தவகையிலும் பின்தள்ளப்பட்ட சந்தர்பமோ உதாசினம் செய்யப்பட்ட நிகழ்வுகளோ இடம்பெறவில்லை. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய தவிசாளர் நடனேந்திரன், சபை செயலாளர் பாலறுபன் ஆகிய இருவருக்கும் ஏனைய உறுப்பினர்கள், உத்தியோகத்தர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எமது கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் எமது சபையே ஏனைய சபைகளுக்கு முன்னோடியாக விளங்கியுள்ளது. அடுத்துவரும் ஆட்சியில் யார்வருவார்களோ தெரியாத நிலையில் எமது ஆட்சியின் இடம்பெற்ற விடயங்கள் அடுத்த புதிய சபைக்கு முன்னேற்பாடான எடுத்துகாட்டாக அமையும் என்றார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.