தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை சிறுவர்களுக்கு பால்மா பைக்கெற்றுகள்!

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை சிறுவர்கள் விடுதிக்கு, மூன்று சிறுவர்கள் போசாக்கின்மையால் பொருளாதார நெருக்கடியை இடர்கொள்கிறார்கள் என வைத்தியசாலை சிறுவர்கள் விடுதியினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்க பொதுச்சபை உறுப்பினரும் சண்டிலிப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தருமாகிய சிவராஜா கஜன் அவர்கள் தனது தனிப்பட்ட நிதியில் 18 ஆயிரம் ரூபாவுக்கு ஒரு மாதத்துக்குரிய 12 சத்துணவு பால்மாக்களை மூன்று சிறுவர்களுக்குமாக நோயாளர் நலன்புரிச் சங்கம் ஊடாக விடுதிச் சகோதரியிடம் வழங்கினார்.

இந்தக் கையளிக்கும் நிகழ்வில் வைத்திய உத்தியோகத்தர் ஜனனி, நோயாளர் நலன்புரிச் சங்க செயலாளர் லயன் சி.ஹரிகரன், நிர்வாக உத்தியோகத்தர் ரமேஸ், தாதிய உத்தியோகத்தர், தாதிய விடுதி சகோதரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, ஆலங்குளாய், சண்டிலிப்பாயில் வதியும் தொழில்நுட்ப உத்தியோகத்தராகிய இவரது உறவினர் ஒருவரும் பிறிதொரு பிள்ளைக்கு 3 லக்ரோஜன் மாக்களை இதனோடு சேர்த்து வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.