வாழ்க்கைச் செலவுகளை தனியார் துறையினரால் சமாளிக்க முடியுமாயின் அரச சேவையாளர்களால் ஏன் முடியாது – ரொஷான் ரணசிங்க கேள்வி

உயர்வடைந்துள்ள வாழ்க்கை செலவுகளை தனியார் சேவை துறையினரால் சமாளிக்க முடியுமாயின், அரச சேவையாளர்களால் ஏன் சமாளிக்க முடியாது.

குறுகிய அரசியல் நோக்கங்களை அடிப்படையாக கொண்டு அரச தொழிற்துறையினர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

மஹரக பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

வாழ்க்கைச் செலவு அதிகம்,வரி அதிகம் என அரச சேவையாளர்கள் தொழிற்சங்க போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.

நாட்டில் அரச சேவையை காட்டிலும், தனியார் துறையில் அதிகளவானோர் தொழில் புரிகிறார்கள். குறைவான சம்பளம் பெறுகிறார்கள், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு பெரும் பங்களிப்பு வகிக்கிறார்கள்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியால் தனியார் சேவைத்துறையினர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தனியார் சேவை துறையினருக்கு அரசாங்கத்தை எதிர்பார்த்து இருப்பதில்லை.

ஆகவே வாழ்க்கைச் செலவுகளை தனியார் துறையினரால் சமாளிக்க முடியுமாயின் ஏன் அரச சேவையாளர்களால் முடியாது.

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடும் தொழிற்சங்கத்தினரில் பெரும்பாலானோர் வரி விதிப்புக்குள் உள்வாங்கப்படவில்லை.

மாதம் பல லட்சக்கணக்கில் சம்பளம் பெறுபவர்களால் 5 ஆயிரம் ரூபாவுக்கும் குறைவான வரியை ஏன் செலுத்த முடியாது. அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளுக்கு அமையவே தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.கொவிட் பெருந்தொற்று காலத்தில் அரச சேவையாளர்களின் கொடுப்பனவுகள் மட்டுப்படுத்தப்படவில்லை.

தற்போதைய நெருக்கடியான நிலையில் இருந்து மீள்வதற்கு அரச சேவையாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.