இந்திய அரசியல் பிரதிநிதிகளுடன் இ.தொ.கா. தலைவர் சந்திப்பு

ஜோர்தானுக்கான இந்தியாவின் முன்னாள் தூதுவர் மாரிமுத்து, இந்தியாவின் இராஜதந்திரி ஸ்ரீ.கோபாலசாமி பார்த்தசாரதி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றது.

கோபாலசாமி பார்த்தசாரதியின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற இச்சந்திப்பில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை மேலும் பலப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, எதிர்காலத்தில் இலங்கைக்கு இந்தியா முழு ஆதரவை வழங்க வேண்டும் என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்