மொரவெவ பிரதேச சபை உறுப்பினர் மீது வாள்வெட்டு தாக்குதல் – சந்தேகநபர் தப்பியோட்டம்

திருகோணமலை – மொறவௌ பிரதேச சபை உறுப்பினரொருவர் வாள்வெட்டு தாக்குதலால் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது.

பிரதேச சபை உறுப்பினரை தாக்கிய சந்தேகநபர் ஓட்டோவில் வருகை தந்துள்ள நிலையில் ஓட்டோவை விட்டு தப்பியோடியுள்ளார் எனவும் தெரியவருகின்றது.

இந்தச் சம்பவத்தில் மொரவௌ – நாமல்வத்த பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே காயமடைந்துள்ளார்.

அரசியல் கூட்டம் ஒன்றிற்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்த வேளையில் ஓட்டோவில் வருகை தந்த சந்தேகநபர் வாளால் வெட்டினார் என ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இதன்போது வாள் வெட்டுக்கு இலக்கான பிரதேச சபை உறுப்பினர் 1990 அம்புலன்ஸ் மூலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பாக மொரவௌ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.